வவுனியா வைத்தியசாலையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீதான தாக்குதல் முயற்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாக்கப்பட்டமையை கண்டித்து இன்று (25.06.2022) மதியம் 12.00 மணி தொடக்கம் 1.00மணி வரையில் ஆர்ப்பாட்டம் முன்னேடுக்கப்பட்டது.
ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தினர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஊழியர்கள், மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் உயிர்காக்கும் தொழிலுக்கே உயிராபத்தா?, எரிபொருளினால் தாக்கப்படும் சுகாதார ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்கு, கிளிநொச்சி பிராந்திய பணிப்பாளர் தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிக்கின்றோம், போன்ற வசனங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். (Vavuniyan)
No comments