Breaking News

வவுனியாவில் கரடி தாக்கி ஒருவர் படுகாயம்


வவுனியாவில் கரடியின் தாக்குதலிற்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் வவுனியா புளியங்குளம், கல்மடு பகுதியில் நேற்று இடம்பெற்றிருந்தது. 

மரக்கடத்தல் ஒன்றினை முறியடிக்க சென்ற பொலிஸ் குழுவின் மீதே கரடி தாக்குதல் மேற்கொண்டுள்ளது. 

குறித்த சம்பவத்தில் வவுனியா புளியங்குளம் பொலிஸ் நிலைய சாஜன்ட் ஆன ரனசிங்க என்பவரே கரடியின் தாக்குதலில் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan) 

No comments