புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான தகவல்
புதிய ஜனாதிபதி ஒருவரை தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பை எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்றத்தில் நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 19ம் திகதி ஜனாதிபதிக்கான வேட்பு மனு கோரப்படவுள்ளதுடன், புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பை அடுத்த தினமே நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே சபாநாயகர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளதாக நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. (Vavuniyan)
No comments