கடலலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவன்
நேற்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ருஹுனு பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்தில் முதலாம் வருடத்தில் கல்வி பயிலும் 22 வயதான மாணவன் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
குறித்த மாணவன், காலி- தல்கம்பல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
17 மாணவர்களைக் கொண்ட குழுவொன்று குறித்த தடாகத்தில் குளித்துக்கொண்டிருந்த போது, மாணவர்கள் மூவர் திடீரென அதிகரித்த கடல் அலையால் அள்ளுண்டு செல்லப்பட்டனர்.
எனினும் இதன்போது இரண்டு மாணவர்கள் காப்பாற்றப்பட்டு மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகளும் கந்தர பொலிஸாரும் இணைந்து காணாமல் போன மாணவனைத் தேடும் பணிகளை முன்னெடுத்துள்ளனர். (Vavuniyan)
No comments