உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காத 14 அமைச்சர்கள்
முன்னாள் அமைச்சர்கள் 14 பேர் இன்னும் தமது உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த முன்னாள் அமைச்சர்களுக்கு நினைவூட்டல் ஒன்றை விடுத்துள்ள அமைச்சு, இம்மாதம் 30 ஆம் திகதிக்குள் இடத்தை காலி செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
அத்தோடு, வீடுகளுக்குத் திரும்புவதற்கு முன் தண்ணீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து பயன்பாட்டுக் கட்டணங்களையும் செலுத்துமாறு அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Paid Advertisement |
No comments