செட்டிக்குளத்தில் காட்டு யானை தாக்குதல் - இளைஞன் பலி
வவுனியா, செட்டிக்குளம் கிருஸ்தவகுளத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் ஒருவன் உயிரிழந்ததாக பறயநாலங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா செட்டிகுளம், கிறிஸ்தவகுளம் பகுதியில் இன்று காலை இருவர் காட்டுக்குச் சென்ற போதே குறித்த சம்பவம் இடம்பெற்றள்ளதாக பொலஸார் மேலும் தெரிவித்தனர்.
கிறிஸ்தவகுளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய விக்னேஸ்வரன் கேதீஸ்வரன் என்பவரே குறித்த யானையின் தாக்குதலிலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை பறயநாலங்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கபட்டு வருவதுடன் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

![]() |
Paid Advertisement |
No comments