பிரித்தானியாவில் மாவீரர் நாள் நிகழ்வு
இம்முறை இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நவம்பர் 27 மாவீரர் நாள் உணர்ச்சிபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
அதே போன்று இம்முறை பிரித்தானியாவிலும் எம் நாட்டைச்சேர்ந்த புலம்பெயர் மக்கள் மாவீரர் நாளை மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டித்தனர்.
அந்தவகையில் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் ஏற்பாட்டில் இலண்டன் ஒக்ஸ்போட் நகரில் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது முதலில் பிரதான ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டன.
தொடர்ந்து துயிலுமில்ல பாடல் ஒலிபரப்பாகியது இதன்போது அனைவரும் அமைதியாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இவ் உணர்பூர்வமான அஞ்சலி நிகழ்வில் இலண்டனில் உள்ள நானூறுக்கும் மேற்பட்ட புலம்பெயர் மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தின்ர்.
No comments