வவுனியா ஒமந்தை அலைகல்லுபோட்டகுளம் உடைப்பெடுக்கும் அபாயம்
சீரற்ற காலநிலையால் பெய்துவரும் தொடர் மழை காரணமாக வவுனியா ஒமந்தை அலைகல்லுபோட்டகுளம் உடைப்பெடுக்கும் அபாயநிலையில் காணப்படுவதாக கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் விமலரூபன் தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அலைகல்லுபோட்டகுளம் தற்போது வான் பாய்ந்து வரும் நிலையில் குறித்த குளத்திற்கான நீர்வரத்து அதிகரித்து வருகின்றது.
குறித்த குளத்தில் உமை ஒன்றும் ஏற்பட்டுள்ளமையால் எந்நேரமும் உடைப்பெடுக்கும் சந்தர்ப்பம் உள்ளது. மேலும் குறித்த குளம் உடைப்பெடுக்கும் சந்தர்ப்பத்தில் இதன் கீழ் உள்ள மாளிகை குளமும் உடைக்கும் நிலை ஏற்படும்.
இதனால் பெரும் அனர்த்தம் ஏற்படும் அபாயம் உள்ளமையால் இக் குளத்தின் கீழ் உள்ள கிராமமக்கள் அவதானமாக இருக்குமாறு அவர் தெரிவித்தார்.
No comments