Breaking News

ராஜஸ்தான் அணிக்காகு ஏலம்போன ஹசரங்க, தீக்ஷன


சவுதி அரேபியாவின் ஜித்தாவில் நடைபெறும் 2025 இந்தியன் பிரீமியர் லீக் மெகா ஏலத்தின் முதல் நாளில் இலங்கை நட்சத்திரங்களான வனிந்து ஹசரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோரை ராஜஸ்தான் ரேயால்ஸ் அணி வாங்கியுள்ளது.

இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களும் 2 கோடி இந்திய ரூபா அடிப்படை விலையுடன் ஏலத்தில் நுழைந்தனர்.

ஏலத்தில் வனிந்து ஹசரங்கவை 5.25 கோடி இந்திய ரூபாவுக்கும், மஹீஷ் தீக்ஷன 4.40 கோடி இந்திய ரூபாவுக்கும் ராஜஸ்தான் ரேயால்ஸ் அணி வாங்கியது. நேற்றைய ஏலத்தில் மஹீஷ் தீக்ஷன மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் மட்டுமே இலங்கை வீரர்கள் இடம்பெற்றனர்.

மீதமுள்ள வீரர்கள் ஏலத்தின் இரண்டாம் நாளான இன்று ஏலத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments