Breaking News

வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது


வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மது ஒழிப்பு பிரிவு பொலிசார் இன்று தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மாவட்ட மது ஒழிப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மாவட்ட மது ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி கஜேந்திரன் தலைமையில் பொலிசார் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 20 - 30 வயதுக்கு உட்பட்டவர்களாவர். அவர்கள் சுந்தரபுரம், குழுமாட்டு சந்தி, கல்மடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

No comments