தேசிய புலனாய்வு பிரிவின் காணி கோரிக்கை நிராகரிப்பு
தேசியபுலனாய்விபிரிவிற்கு அலுவலகம் அமைப்பதற்காக வவுனியா நகரப்பகுதியில் காணிகோரப்பட்ட நிலையில் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேச ஒருங்கினைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் உபாலி சமரசிங்க தலைமையில் இன்று இடம்பெற்றது.
காணியற்ற அரசதிணைக்களங்கள், தேசிய புலனாய்வு அலுவலகம், மற்றும் பொது அமைப்புக்கள் ஆகியன தமக்கு நகரப்பகுதியில் காணி ஒதுக்கித்தருமாறு வவுனியாபிரதேச செயலகத்திடம் கடந்த காலங்களில் கோரிக்கை விடுத்திருந்தது.
அதற்கமைய குறித்த அமைப்புக்களுக்கு வவுனியா பூங்காவீதியில் அமைந்துள்ள பகுதி மற்றும் திருநாவற்குளம் பாரவூர்தி தரிப்பிடம் ஆகியவற்றை பிரித்து வழங்குவது தொடர்பாக கடந்த மாசிமாதம் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அனுமதி கோரப்பட்டிருந்தது.
எனினும் குறித்த காணிவிடயத்தில் தேசிய புலனாய்வு அலுவலகத்தின் காணிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
No comments