Breaking News

இனவாதத்தை தூண்டும் மொட்டு கட்சி - அநுர தரப்பு கடும் சாடல்



பொலிஸாரின் விசாரணைகளின் படி தடை செய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்களை சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்துபவர்களில் கணிசமானவர்கள் சிறீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் என அரச தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறித்த குற்றாச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நேற்று (3.12.2024) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் விசாரணைகள் நடத்தப்பட்டு எதிர்காலத்தில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு புதிய சட்டங்கள் தயாரிக்கப்படும் அல்லது இனவாதம் தோற்கடிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இனவாதம் மற்றும் மதவாத அடிப்படையிலான அரசியலை ஊக்குவிக்க இந்த அரசாங்கம் இடமளிக்காது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments