ரான்ஸ்பரன்ஸி இன்ரநெசனல் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட கட்டுரை போட்டிக்கான பரிசளிப்பு விழா.
சர்வதேச இலஞ்ச ஊழல் ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு ரான்ஸ்பரன்ஸி இன்ரநெசனல் நிறுவனத்தினால் இளைஞர்களுக்கிடையே நடாத்தப்பட்ட கட்டுரை போட்டிக்கான பரிசளிப்பு விழா வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
ஊழலிற்கெதிரான நாளைய தேசத்தை உருவாக்குவதில் நாம் ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இக்கட்டுரைப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கு பணப்பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர் கௌரீஸ்வரன், வவுனியா முகாமையாளர் செல்வலக்சுமி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார் மற்றும் எழுத்தாளர் சகாயநாதன், சிரேஷ்ட ஊடகவியலாளர் ந.கபிலநாத், மற்றும்.இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments