Breaking News

அதிரடியாக அதிகரித்த சிகரெட் மற்றும் மதுபான விலைகள்



இன்று (11.01.2025) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிகரெட் விலையை அதிகரிக்க  இலங்கை புகையிலை நிறுவனம் (Ceylon Tobacco Company) தீர்மானித்துள்ளது.

கலால் வரி அதிகரிப்புடன் சிகரெட் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நான்கு வகையான சிகரெட்டுக்களின் விலை 5 மற்றும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, CAPSTAN மற்றும் John Player சிகரெட்டுகளின் விலை 5 ரூபாவாலும் dunhill மற்றும் Gold Leaf சிகரெட்டுகளின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது

இதேவேளை, இன்று (11.01.2025) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலைகளை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மனுபானங்களின் விலைகளை 6 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments