இடமாற்றம் வழங்கியும் குறித்த பாடசாலைக்கு செல்லாத ஆசிரியர்களுக்கு என்ன நடவடிக்கை எடுப்பது? வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கேள்வி
இடமாற்றம் வழங்கியும் குறித்த பாடசாலைக்கு செல்லாத ஆசிரியர்களுக்கு என்ன நடவடிக்கை எடுப்பது என வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா தெற்கு வலய ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
வவுனியா தெற்கு வலயத்தில் ஆசிரியர் இடம்மாற்றம் தொடர்பாக பேசப்பட்டது. செட்டிகுளத்திற்கும், நகரப் பாடசாலைகளுக்கும் இடையில் பெரியளவில் வித்தியாசம் இல்லை. இருக்கின்ற ஆசிரியர்களை பகிர்ந்து வழங்கியுள்ளோம்.
இடமாற்றம் என்பது இடமாற்ற சபை ஊடாக மேற்கொள்ளப்படுகிறது. தனிய அதிகாரியோ அல்லது வலயக் கல்விப் பணிப்பாளரோ அதனை மேற்கொள்ளவில்லை. தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இடமாற்ற சபையில் இடமாற்றம் செய்யப்படும். மேன் முறையீட்டு சபையிலும் தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் அதனை செயற்படுத்தாத ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை இல்லை.
அவர்கள் போகாது விட்டால் வலயக் கல்விப் பணிப்பாளரால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது. அதற்கு என்ன தீர்வு என்று சொன்னால் செய்ய முடியும். அந்த தீர்வை வரையறுத்து தந்தால் நாம் நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்தார்.
No comments