Breaking News

வவுனியாவில் ஒரு வயது குழந்தை உட்பட 36 பேருக்கு கொரோனா தொற்று

வவுனியாவில் 36 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாத சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (31) இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக கொரோனா தொற்று ஒரு வயது குழந்தை உட்பட மேலும் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை தனிமைப்படுத்துவதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு அவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments