வவுனியாவில் ஐயப்ப சாமிகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு
வவுனியாவில் ஐயப்ப விரதத்தினை நோற்கும் சாமிகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்துக்களால் முன்னெடுக்கப்படும் சபரிமலை சுவாமி ஐயப்பன் விரத பூஜை வழிபாடுகள் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலயம் மற்றும் கூமாங்குளம் நாகபூசனி அம்மன் ஆலயத்திலும் ஐயப்பன் சாமிகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
சபரிமலை தீர்த்த யாத்திரை குழுவின் குருசாமி மணிசாமியினாலும், ஐயனார் ஆலயத்தில் கிருஸ்ணா குருசாமியினாலும் ஐயப்ப சாமிகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.
இதன்போது விசேட பூஜை நிகழ்வுகளும் நடத்தப்பட்டிருந்தன.
இதேவேளை ஐயப்ப சாமிகளும், பக்தர்களும் முகக்வசம் அணிந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வழிபாட்டில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments