யுரேனஸ் இளைஞர் கழக பொங்கல் விழா கொண்டாட்டம்
இந் நிகழ்வு வவுனியா மாவட்ட சம்மேளனத்தின் தலைவரும் யுரேனஸ் இளைஞர் கழகத்தினுடைய தலைவருமான கணேசலிங்கம் சிம்சுபன் தலைமையில் ஆரம்பமானது.
வரலாற்று சிறப்பு மிக்க சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயத்தில் இருந்து கலைநிலா கலையத்தினரின் பறை வாத்தியங்கள் முழங்க கிராம மக்கள் மற்றும் இளைஞர் யுவதிகளால் கும்பம், பொங்கல் பானை மற்றும் திரவியங்கள் கொண்டுவரப்பட்டு குழந்தை ஜேசு ஆலய ஸ்ருவத்தில் மெழுகுதிரி ஏற்றப்பட்டு பொங்கல் பானை வைக்கப்பட்டது.
இளைஞர் உறுதியுரையோடு சிறார்கள் மற்றும் யுரேனஸ் இளைஞர் கழக இளைஞர் யுவதிகளின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றது.
தொடர்ந்து கலைநிலா கலையகத்தினரின் மகிழ்வூட்டல் நிகழ்வும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது
தமிழர்களின் பண்பாட்டை பிரதிபலிக்கும் தைத்திருநாள் பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் யுரேனஸ் இளைஞர் கழகத்தின் உறுப்பினர்கள், கலைநிலா கலையக உறுப்பினர்கள், சமளங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள கிராம அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்,கிராம பெரியோர்கள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.(Vavuniyan)
Post Comment
No comments