அரசாங்கத்தினால் வழங்கப்படும் இலவச பரிசு - ஹர்ஷண ராஜகருணா வெளியிட்ட தகவல்
நாளாந்தம் எடுக்கப்படும் தேவையற்ற தீர்மானங்களினால், பல உயிர்கள் காவுக்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அரசாங்கத்தின் இயலாமை காரணமாகவே, இன்று ஆயிரக்கணக்கான உயிர்கள் இல்லாது போயுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
நாட்டில் முதலாவது அலை ஏற்படும் போது விமான நிலையத்தை உரிய நேரத்தில் மூடவில்லை எனவும், உரிய தடுப்பூசிகளை செலுத்தாது, தம்மிக்க பாணிக்கு பின்னால் அரசாங்கம் சென்றதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
மேலும், மினுவங்கொட பகுதியில் மற்றுமொரு கொவிட் 19 அலை ஏற்படும் போது, கம்பஹா மாவட்டத்தை மாத்திரம் மூடாதிருந்தமையினால், நாடு முழுவதும் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் ஹர்ஷண ராஜகருணா தெரிவிக்கின்றார். (Vavuniyan)
No comments