Breaking News

வவுனியாவில் சேதன பசளையில் நெற் செய்கைக்கான வயல்விழா


சேதன நெற் செய்கையில் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுபோகத்திற்கான பயணம் எனும் தொனிப்பொருளில் வயல்விழா இன்று வவுனியா முருகனூர் விவசாய பண்ணையில் இடம்பெற்றது.

வட மாகாண விவசாய பணிப்பாளர் எஸ். சிவகுமாரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்த குறித்த நிகழ்வில் மண்புழு உரம், அசோலா தாவரம், கூட்டெரு மற்றும் ஏனைய இயற்கை உரத்தில் செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கை வயல்கள் விவசாயிகளின் பார்வைக்காக விடப்பட்டிருந்ததுடன் விளக்கமும் வழங்கப்பட்டது.

இதேவேளை பாரம்பரிய முறையிலான பாடல்பாடி அறுவடை செய்யும் முறைமையும் காட்சிப்படுத்தப்பட்டதுடன் சேதன பசளையில் உற்பத்தி செய்யப்பட்ட வயல் நிலத்தில் அறுவடையும் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டிருந்ததுடன் விவசாயிகளும் கலந்துகொண்டு பயன்பெற்றிருந்தனர்.(Vavuniyan)











 

No comments