Breaking News

முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பிக்களுக்கு வருகின்றது ஆபத்து


ஒரு கோடி ரூபாவுக்கு அதிக நீர் கட்டணத்தை செலுத்துவதற்கு தவறியுள்ளதாக கூறப்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்க உள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தகவல்களை வழங்குமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.(Vavuniyan) 

No comments