Breaking News

வவுனியா மாவட்ட ரி10 கிரிக்கெற் சுற்றுப்போட்டி


வவுனியா மாவட்ட மட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அணிகளிற்கான ரி10 கடினப்பந்து கிரிக்கெற் சுற்றுப்போட்டி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப்போட்டியின் ஆரம்ப நிகழ்வானது வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன் போது விருந்தினர்களிற்கு மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டிருந்ததுடன், பிரதம விருந்தினரால் வெற்றிக்கின்னம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது.

வவுனியா மாவட்ட கடினப்பந்து துடுப்பாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் சங்க தலைவர் யோ.ரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார், நகரசபை தலைவர் இ.கௌதமன், வடமாகாண கடினப்பந்து துடுப்பாட்ட சங்க செயலாளர் வி.சுந்தரலிங்கம், மற்றும் அணிகள் மற்றும் கிரிக்கற் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கிரிக்கெற் சுற்றுப்போட்டியில் 18 அணிகள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)









 

No comments