Breaking News

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் 27 ஆவது கலைவிழா நிகழ்வு


வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் 27 ஆவது கலைவிழா நிகழ்வு இன்று இடம்பெற்றது.


குறித்த நிகழ்வானது இன்று சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு சங்கத்தின் தலைவர் வைத்தியர் ப.சத்தியநாதனின் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

இதன் போது பிரதம விருந்தினர்களிற்கு மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டிருந்ததுடன், பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இதன் போது இடம்பெற்றிருந்தது. மேலும் பாலர் பாடசாலை மாணவர்களின் திறமைகளிற்காக நினைவு கின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக, வவுனியா வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி. அன்னமலர் சுரேந்திரன், சிறப்பு விருந்தினராக, முன்பள்ளி உதவிக்கல்வி பணிப்பாளர் வீரவாகு பரஞ்சோதி, கௌரவ விருந்தினராக, திருமதி. கமலாதேவி குமாரதாஸ், பாலர் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். (Vavuniyan)








No comments