Breaking News

வவுனியாவில் தந்தை செல்வாவின் 124ஆவது ஜனன தினம் அனுஷ்டிப்பு

வவுனியாவில் தந்தை செல்வாவின் 124ஆவது ஜனன தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. 

வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின்  திருவுருவசிலையடியில்  காலை 9 மணியளவில் நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா தலைமையில் தமிழரசுக்கட்சியின் தலைவர் தந்தை செல்வநாயகத்தின் 124 ஆவது ஜனன தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அன்னாரது நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்துடன், மலர் அஞ்சலியும் செலுத்தியிருந்தனர். 

இதேவேளை தந்தை செல்வநாயகம் தொடர்பான நினைவுபேருரையினை நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா நிகழ்த்தியிருந்தார்.

No comments