வவுனியாவில் இளைஞனை தாக்கிய சந்தேக நபர்கள் தலைமறைவு - பொலிஸார் வலைவீச்சு
வவுனியாவில் கடந்த இரு தினங்களுக்கு முன் இளைஞன் ஒருவரைத் தாக்கி காயப்படுத்திய சந்தேக நபர்கள் வவுனியாவிலிருந்து தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை தேடி கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர் .
வவுனியாவில் (28.03) இரவு இளைஞன் ஒருவர் மீது நொச்சிமோட்டை பகுதியில் வைத்து தாக்குதல் நடாத்திய சம்பவம் குறித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞனின் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மூன்று நபர்கள் இச்சம்பவத்தில் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
அவர்களை தேடி அவர்களின் வீடுகளுக்கு சென்றபோது அவர்கள் தலைமறைவாகியது தெரிய வந்துள்ளதாகவும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
No comments