Breaking News

ஆசியாவில் சிக்கிய 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அதிசயம்!


ஜப்பானின் பசிபிக் கடலிலுள்ள சிகோகு என்ற தீவின் அருகே கடல் கன்னி போலிருக்கும் ஒரு மம்மி கிடைத்துள்ளது.

இவ் மம்மி வெறும் 12 இன்ச் மட்டுமே நீளமாக உள்ளது.

இது 1736- 1741 ஆம் ஆண்டுக்குள்பட்ட காலகட்டத்தில் ஜப்பானின் சிகோகு பகுதியில் வாழ்ந்த உயிரினமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். குறித்த மம்மி கைப்பற்றப்பட்ட போது அசோகுசி நகரத்திலுள்ள கோயிலில் இருந்திருக்கிறது.

ஜப்பானின் அசாகி ஷிம்புன் என்ற செய்தித் தாள் அளித்த தகவலின் படி கைப்பற்றப்பட்டுள்ள மம்மி பசிபிக் கடலில் மீனவர்கள் மீன் பிடிக்கையில் கிடைத்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மம்மிக்கு கூர்மையான பற்கள் காணப்படுகிறது. முகமும் விகாரமாக அச்சத்தை கொடுக்கும் வகையில் உள்ளது.

அதன் மேற்பகுதி மனித முக அமைப்புடன் ஒற்று உள்ளது. ஆனால் கீழ் பகுதியோ மீன்களுக்கு இருப்பது போல் உள்ளது. குறிப்பாக கீழ் பகுதியில் மீன்களைப் போல செதில்கள் மற்றும் வால் போன்ற குறுகிய முனை காணப்படுகிறது.

சுருக்கமாக சொல்ல போனால் கடற்கன்னியை போல் காணப்படுகிறது. இதுகுறித்து ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் சிடி ஸ்கேன் மூலம் ஆய்வு செய்து வருகிறார்கள். (Vavuniyan) 


No comments