Breaking News

மனைவியைத் தாக்கி காயப்படுத்திய கணவனுக்கு பிணை


குடும்பத்தில் ஏற்பட்ட வன்முறையினால் மனைவியை தலைக்கவசம் மற்றும் விறகுக்கட்டையால் தாக்கிய காயப்படுத்திய கணவனை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைகளுக்கு அழைத்த பொலிசார் மேலதிக விசாரணைகளின் பின்னர் நேற்று பிற்பகல் நீதிமன்றத்தில் முற்படுத்ததியபோது நீதவானினால் பிணை வழங்கப்பட்டுள்ளது . 


கடந்த சனிக்கிழமை கணவன் அவரது மனைவியைத் தாக்கி காயப்படுத்தியிருந்தார் . அயலவர்களினால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைவாக கணவனை விசாரணைக்கு நேற்றைய தினம் அழைத்த பொலிசார் வாக்கு மூலம் பதிவு செய்து நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திப்பட்டபோது சந்தேக நபருக்குப்பிணை வழங்கப்பட்டுள்ளது . 

எனினும் கிராம அலுவலகரின் கடிதம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை இதையடுத்து குறித்த சந்தேக நபரான கணவன் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (Vavuniyan)

No comments