Breaking News

வாரத்தில் மூன்று நாட்கள் வீட்டிலிருந்து வேலை


ரஷ்யா – உக்ரைன் போர் நிலைமை காரணமாக தற்போதைய உலகளாவிய ரீதிய எரிபொருள் நெருக்கடிக்கு தற்காலிக தீர்வை வழங்குவதற்கான 10 பரிந்துரைகளை சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) வெளியிட்டுள்ளது.

இந்த முன்மொழிவுகளை படிப்படியாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் நுகர்வோரின் பழக்கங்களை மாற்றுவதன் மூலம் 4 மாதங்களில் உலகில் எரிபொருள் பாவனையை பெரல் 2.7 ஆல் குறைப்பதற்கான இடத்தை உருவாக்கிக் கொள்ள முடியம் என எரிபொருள் பரிசோதைனை குழு தெரிவித்துள்ளது.

குறித்த 10 பரிதுரைகள் பின்வருமாறு…

  1. வாரத்தில் மூன்று நாட்கள் வீட்டில் இருந்து பணியினை செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல்.
  2. அதிவேக நெடுஞ்சாலைகளில் வேக வரம்பை மணிக்கு 10 கி.மீ ஆக குறைத்தல். 
  3. முடிந்தவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல்.
  4. ஞாயிற்றுக்கிழமைகளை நகரத்தில் மோட்டார் வாகனங்கள் இல்லாத நாளாக மாற்றுதல்.
  5. எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க தனியார் வாகனங்களின் இடத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது. 
  6. பெரிய நகரங்களுக்கு தனியார் வாகனங்கள் நுழைவதைக் கட்டுப்படுத்துதல். (திகதி முன்பதிவு, வாகன எண் தகடுகளின்படி வருகை அமைப்பு)
  7. பொருட்களை கொண்டுசெல்லும் போது திறமையான போக்குவரத்தை உறுதி செய்தல்.
  8. விமானப் போக்குவரத்திற்குப் பதிலாக அதிவேக ரயில் மற்றும் இரவு ரயில் சேவையை பழக்கப்படுத்துதல்.
  9. வணிக வகுப்பு விமானங்களை நிறுத்திவிட்டு மாற்றுப் பயன்பாடுகளுக்கு மாறுதல்.
  10. பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களைப் பயன்படுத்துதல்

No comments