Breaking News

பால்மாவின் விலையில் ஏற்பட்ட மற்றுமோர் அதிகரிப்பு!


பெல்வத்த பால் மா நிறுவனம் 400 கிராம் பால் மா பக்கெட்டொன்றின் விலையை 105 ரூபாவால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், 400 கிராம் பெல்வத்த பால் மா பக்கெட்டொன்றின் புதிய விலை 625 ரூபாவாகும்.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 250 ரூபாவால் நேற்றையதினம் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், பால் தேநீர் ஒன்றின் விலையும் 100 ரூபாவாக இன்றையதினம் அதிகரிக்கப்பட்டுள்ளது. (Vavuniyan) 


No comments