Breaking News

நீலங்களின் சமரில் இறுதி போட்டிக்கு நுழைந்தது ஐயனார்


வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்று வரும் நீலங்களின் சமர் முக்கோண தொடர் இடம்பெற்று வருகின்றது.

இத்தொடரின் இரு போட்டிகளில் வெற்றி பெற்ற ஐயனார் விளையாட்டு கழகம் நேற்று இடம்பெற்ற மூன்றாவது  போட்டியிலும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

நேரம் போதாமை காரணமாக 48 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு நடைபெற்ற இப்போட்டியில்,  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐயனார் விளையாட்டு கழகம் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது.

இதன் போது 48 ஒவர்களிற்கு ஐயனார் விளையாட்டு கழகம் 09 விக்கெட்களை இழந்து 221 ரண்களை பெற்றுக்கொண்டது. 

துடுப்பாட்டத்தில் அனோஜன் 01 சிக்ஸ், 09 பவுன்டரிகள் அடங்கலாக 47 ரன்களையும், மிதுன் 04 பவுன்டரிகள் அடங்கலாக 28 ரன்களையும், கேசவன் 04 பவுன்டரிகள் அடங்கலாக 29 ரன்களையும் பெற்றுக்கொண்டனர். 

பந்துவீச்சில் தமிழ் யுனைடெட் சார்பாக வீரக்கோன் 03 விக்கெட்களையும், நுவான் 02 விக்கெட்களையும் கைப்பற்றினார். 

222 ரன்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழ் யுனைடெட் 32.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 199 ரன்களை மட்டும் பெற்று தோல்வியை தழுவிக்கொண்டது. 

இதன் மூலம் ஐயனார் விளையாட்டு கழகம் 22 ரன்களினால் வெற்றிபெற்றுக்கொண்டது. 

துடுப்பாட்டத்தில் 01 சிக்ஸ் 07 பவுன்டரிகள் அடங்கலாக நுவான் 30 ரண்களையும், 03 சிக்ஸ் 11 பவுன்டரிகள் அடங்கலாக அர்சாத் 76 ரன்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் ஐயனார் விளையாட்டு கழகம் சார்பாக சத்தியராஜ் 04 விக்கெட்களையும், சுரேன் மற்றும் மிதுன் 02 விக்கெட்களையும், நிசாந்தன் 01 விக்கெட்களையும் பெற்றுக்கொண்டனர். 

இவ் வெற்றியின் மூலம் நீலங்களின் சமர் முக்கோண தொடரில் 03 போட்டிகளில் வெற்றி பெற்ற ஐயனார் விளையாட்டு கழகம் இறுதி போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. (Vavuniyan) 



No comments