15 வயது பாடசாலை மாணவனை பலியெடுத்த முதலை
கெக்கிராவ – கல்கிரியாகம, மானேருவ பிரதேசத்தில் நீராடச் சென்ற 15 வயது பாடசாலை மாணவன் முதலைக்கு பலியாகிய நிலையில், இன்று (12) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரதேச மக்களும், கல்கிரியாகம பொலிஸாரும் இணைந்து நேற்று (11) மாலை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது சிறுவனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவனின் காலில் முதலை கடித்துள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனை தொடர்ந்து, மாணவனின் சடலம், பிரேத பரிசோதனைக்காக தம்புள்ளை வீர டென்சில் கொப்பேகடுவ ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (Vavuniyan)
No comments