வவுனியாவில் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டம்
அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று வவுனியாவில் இடம்பெற்றிருந்தது.
குறித்த ஆர்ப்பாட்டமானது வவுனியா பொது மக்களின் ஏற்பாட்டில் புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்றிருந்தது.
அமைதியான முறையில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.
இதன் போது வடகிழக்குப் பகுதிகளில் இராணுவ மயமாக்கலை தடுத்து நிறுத்து, தங்களது காணிகளை விடு, பொருட்களின் விலைகளை குறை, தூய்மையான பொறுப்பு வாய்ந்த பாராளுமன்றத்தை அமை என்ற சுலோகங்களை எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான பெண்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments