Breaking News

உடன் கையகப்படுத்துங்கள் - பதவி விலகிய அமைச்சர்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட உத்தரவு


பதவி விலகிய அனைத்து அமைச்சர்களுக்கும் அரசினால் வழங்கப்பட்ட வாகனங்கள், வீடுகள், தளபாடங்கள் மற்றும் அனைத்து உபகரணங்களையும் உடனடியாக கையகப்படுத்துமாறு அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு திறைசேரி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் தற்போது 26 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

திறைசேரி செயலாளர் ஆர். ஆட்டிகல ராஜினாமா செய்வதற்கு முன்னர் குறித்த சுற்றறிக்கையில் கையெழுத்திட்டிருந்தார்.

சுற்றறிக்கையின்படி, அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், அனைத்து மாகாண சபைகளின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் குறித்த பணிப்புரைகளின் கீழ் செயற்பட வேண்டும்.

கடந்த அமைச்சரவையில் இருந்த சுமார் 26 அமைச்சர்கள் ராஜினாமா செய்து ஒரு வாரத்துக்கும் மேலாகியும் அந்த அமைச்சர்களுக்கு சொந்தமான வாகனங்கள் உள்ளிட்ட அரச சொத்துக்கள் எதுவும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (Vavuniyan) 

No comments