அதிகரித்தது பஸ் கட்டணம்
பேருந்து கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் 35 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
போக்குவரத்து அமைச்சில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
பேருந்து கட்டணம் அதிகரிப்பு குறித்து, பேருந்து உரிமையாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, ஆகக்குறைந்த கட்டணமாக காணப்பட்ட 20 ரூபா கட்டணம், நாளை முதல் 27 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகின்றது. (Vavuniyan)
No comments