வவுனியாவில் இளைஞனை மோதிதள்ளிய அமெரிக்கன் எம்பசி சொகுசு வாகனம்
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (28) காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற மூன்று சொகுசு வாகனம் தாண்டிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது நகர் பகுதியிலிருந்து தாண்டிக்குளம் நோக்கி பிரதான வீதியிலிருந்து இடது கரைக்கு துவிச்சக்கர வண்டியில் கடக்க முற்பட்ட இளைஞன் மீது மோதியே இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்திற்குள்ளான சொகுசு வாகனத்தில் அமெரிக்கன் எம்பசியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பயணம் செய்ததாக தெரிய வருகிறது.
குறித்த விபத்தில் திவாகர் (வயது -19) கூமாங்குளத்தை சேர்ந்த இளைஞர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய குறித்த வாகனம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post Comment
No comments