வவுனியாவில் போராட்டக்காரர்களை கண்டு ஒழிந்த கலகத்தடுப்பு பொலிசார்!
பொருட்களின் விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்று கோரியும் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களால் வவுனியாவில் இன்று பாரிய ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போதுவவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் அலுவலகம் நோக்கி ஆர்பாட்டக்காரர்கள் சென்றனர்.
இதனையடுத்து அசாம்பாவிதங்களை தடுக்கும் முகமாக கலகத்தடுப்பு பொலிசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
எனினும் போராட்டக்காறர்கள் அலுவலகத்திற்கு முன்பாக வருகைதந்த போது கலகத்தடுப்பு பொலிசார் வெளியில் வராமல் அமைச்சரின் அலுவலகத்திற்குள் சென்று ஒழிந்து நின்றனர். ஆர்பாட்டங்கள் முடிவடைந்த பின்னரே அவர்கள் வெளியில் வருகைதந்தனர்
No comments