Breaking News

அரசுக்கு ஆதரவு வழங்காதே! ஊழல் வாதியே வீட்டுக்குப்போ ! வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு அலுவலகம் முன்பாக போராட்டம்


வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் மேற்கொண்ட ஒன்றிணைந்த கூட்டுத் தொழிற்சங்கம் அரசுக்கு ஆதரவு வழங்காதே ! ஊழல் வாதியே வீட்டுக்குப் போ ! என்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது .


காமினி சிங்கள மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த கூட்டுத் தொழிற்சங்கம் அங்கிருந்து மாவட்ட அபிவிருத்திக்குழு அலுவலகத்திற்கு முன்பாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி போராட்டத்தை மேற்கொண்டுள்ளப்பட்டபோது அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததுடன் மதிலில் அரசுக்கு ஆதரவு வழங்காதே என்ற வசனம் தமிழ் மற்றும் சிங்களத்தில் எழுதி, கறுப்புக் கொடியை அலுவலகத்தில் பறக்கவிட்ட போராட்டக்காரர்கள் கண்டி வீதி வழியாக பேரணியாக தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் .

இப்போராட்டத்தில் பெருமளவான இளைஞர்கள் யுவதிகள் கலந்து கொண்டனர்







No comments