வவுனியாவில் மண்ணெண்ணைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருளுக்காக இன்றும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில், வவுனியாவில் உள்ள எரிபொருள் நிலையங்களை சூழ அதிகளவு தூரம் வரை மண்ணெண்ணையை பெற்றுக்கொள்ள மக்கள் வரிசை நீடித்திருப்பதையும் அவதானிக்க முடிந்தது.
அத்தோடு எரிபொருளை கொள்வனவு செய்யும் போது மிகக் குறைந்த அளவிலேயே எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வழங்கி வருவதாகவும், ஒரு நபருக்கு 500 ரூபாவிற்கு என்ற அடிப்படையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். (Vavuniyan)
No comments