Breaking News

ஜனாதிபதி தலைமையில் இன்று முக்கிய கலந்துரையாடல்


அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மற்றும் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுகின்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இன்றையதினம் இடம்பெறவுள்ளது.

சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் தீர்மானம் மிக்க கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் குறித்த அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, இன்றையதினம் காலை 10.30 மணியளவில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த 11 கட்சிகள் நேற்று பிற்பகல் ஒன்றுகூடியிருந்தன.

இதன்போது. ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பு தொடர்பில்  கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு 11 கட்சிகள் அணி தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். (Vavuniyan) 

No comments