Breaking News

வவுனியா ஓமந்தையில் தொடரூந்தில் பாய்ந்து இளைஞர் தற்கொலை!!


வவுனியா ஓமந்தை பகுதியில் தொடரூந்தில் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த குறித்த தொடரூந்து ஓமந்தை தொடரூந்து நிலையத்திற்கு அண்மையில் சென்று கொண்டிருந்த போது குறித்த சம்வம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தினை சேர்ந்த 23 வயதான இளைஞர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments