Breaking News

வன்புணர்வு வீடியோவைக் காட்டி மிரட்டியவர்கள் கைது! டுபாய்க்கு தப்பி ஓடியவருக்கும் சிக்கல்


13 வயது சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்தி, அதை வீடியோவாக எடுத்து 10 இலட்சம் ரூபாய் கப்பம் கேட்டு மிரட்டி வந்த இரு சந்தேகநபர்களை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரினால் 3 பேருக்கு எதிராக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தமைக்கு அமைவாக  பொலிஸார் 3 சந்தேகநபர்களையும் அடையாளம் கண்ட நிலையில் தேடுதல் மேற்கொண்டு வந்தனர்.

எனினும் சந்தேக நபர்களில் ஒருவரான சாய்ந்தமருது 3 இனை சேர்ந்தவர் டுபாய் நாட்டிற்கு தப்பி சென்ற நிலையில் ஏனைய சந்தேக நபர்களில் கப்பம் கோரியவரான மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபர் கல்முனை பகுதி உணவகமொன்றில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பின்னர் கைதானவரின் தகவலுக்கமைய இச்சம்பவத்திற்கு உடந்தையான செயற்பட்ட மற்றுமொரு 31 வயதுடைய சந்தேக நபர் சாய்ந்தமருது பகுதியில் வைத்து கைதானார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களிடமும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் வெளிநாட்டிற்கு தப்பி சென்ற சந்தேகநபரினை கைது செய்ய நீதிமன்ற நடவடிக்கை ஊடாக சர்வதேச பிடியாணை உத்தரவினை பெறுவதற்கு எடுக்கப்பட்டு வருகின்றது.

கைதான சந்தேக நபர்கள் கஞ்சா, ஐஸ் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. (Vavuniyan) 

No comments