Breaking News

காயமடைந்தோரின் எண்ணிக்கை 79ஆக உயர்வு


போராட்டக்களங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளுக்கு இலக்காகி காயமடைந்தோரின் எண்ணிக்கை 79ஆக உயர்வடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை முதல் நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களிலும் கலகக்காரர்களால் தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நாடு மழுவதும் காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதுடன், கலகக்காரர்களினாலும் பொது உடைமைகள் சேதமாக்கப்பட்டு வருகின்றன. (Vavuniyan) 

No comments