இலங்கைக்கான கடன் நிவாரணம் வழங்க ஜி-7 நாடுகள் ஒத்துழைப்பு
இலங்கைக்கான கடன் நிவாரணம் வழங்குவதற்கான முயற்சிகளுக்கு ஜி-7 நாடுகள் ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளன.
உலக வல்லரசுகளின் அமைப்பான ஜி-7 நாடுகளின் நிதியமைச்சர்களது மாநாடு ஜேர்மனியில் இடம்பெறுகிறது.அந்த மாநாட்டில் இணங்கப்பட்ட கடித வரைவு ஒன்றில் இலங்கை பெற்றுள்ள கடன்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க இருப்பதாக நிதியமைச்சர்கள் தெரிவித்ததாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
G7 நாடுகளின் அறிக்கையில் இந்தியப் பெருங்கடல் தேசத்திற்கான நீண்டகால தீர்வுகளைக் கண்டறிவதில் உறுதியாக இருப்பதாகவும் சாத்தியமான கடன் திட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஆக்கப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த ஒத்துழைப்பதாகவும் தெரிவித்துள்ளது.
No comments