Breaking News

கல்கிசை, தெஹிவளையில் எரிபொருளினை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்



நாட்டில் இரண்டு நாட்களுக்கு பின்னரே பெற்றோல் வழங்கப்படும் எனவும் எனவே மக்களை வரிசையில் நிற்கவேண்டாம் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் மக்கள் எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதனை அவதானிக்க முடிகின்றது.குறிப்பாக இரத்மலானை, கல்கிசை, தெஹிவளை உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் எரிபொருளினை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருப்பதனை அவதானிக்க முடிந்தது.

அதேபோன்று பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை ஆகிய பகுதிகளிலும் மக்கள் எரிபொருளினை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருப்பதனை அவதானிக்க முடிந்தது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நேற்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன் அத்தியாவசிய சேவை புரியும் அரச உத்தியோகத்தர்கள் மாத்திரமே இன்றைய தினம் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

No comments