நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அதிகரிப்பு
அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் இதுவரையில் 120 பேர் கையொப்பமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சகல தரப்பினரும் கலந்துரையாடி இணங்கியுள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ள சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (Vavuniyan)
No comments