விபத்தில் ஒருவர் பலி – ஆத்திரமடைந்த மக்கள் வாகனத்திற்கு தீ வைப்பு
குளியாப்பிட்டிய, கனதுல்ல பிரதேசத்தில் டிபென்டர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 38 வயதான இவர் குளியாப்பிட்டிய கனதுல்ல பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தின் பின்னர், டிபென்டர் வாகனத்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல முயன்ற போது அருகில் இருந்தவர்கள் தாக்கி தீ வைத்துள்ளனர்.
டிபென்டரின் சாரதி குளியாப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். (Vavuniyan)
No comments