வவுனியாவில் புதிய இராணுவச்சோதனைச்சாவடி உதயம்!’
வவுனியா ஏ9 வீதி கொக்குவெளிப்பகுதியில் புதிய இராணுவச்சோதனைச்சாவடி ஒன்று இன்று அமைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை குறித்த பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக குறித்த சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் ஏற்கனவே ஓமந்தை, நெடுங்கேணி, பம்பைமடு, ஈரற்பெரியகுளம் பகுதிகளில் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments