Breaking News

புகையிரதம் மற்றும் பேருந்து சேவை பற்றி வெளிவந்த தகவல்


7 மணித்தியாலங்களுக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதால் இன்று புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

களுத்துறை தெற்கில் இருந்து வெயாங்கொடை வரை மாத்திரம் சில புகையிரதங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

இதேவேளை, ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் காலப்பகுதியில் குறுகிய தூர பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. (Vavuniyan) 

No comments