Breaking News

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி! பலப்படுத்தப்பட்ட இந்திய கடலோரக் காவல்


இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு மக்கள் செல்வதைத் தடுக்கும் நோக்கில் இந்தியக் கடலோரக் காவல்படையினரால் கடலோர காவல் நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்காக [கிரப் ஓவர்] கப்பல் என்று சொல்லப்படும் கடலிலும் தரையிலும் செல்லக்கூடிய கப்பல் பயன்படுத்தப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு பலர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இன்று வரை புகலிடம் கோரி சென்ற மக்களுக்கான புகலிட அனுமதி வழங்கப்படாமையால் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுத்து வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan) 

No comments