Breaking News

புகையிரதத்தில் இயந்திரக்கோளாறு!! பொதுமக்கள் அவதி!!


இன்று மதியம் மதவாச்சியில் இருந்து மன்னார் சென்ற புகையிரதத்தில் இயந்திரக்கோளாறு ஏற்ப்பட்டமையால் பொதுமக்கள் அசௌகரியங்களை சந்தித்தனர்.

இன்று மதியம் 2 மணியளவில் மதவாச்சி பகுதியில் இருந்து தலைமன்னார் நோக்கிய பயணித்த குறித்த புகையிரதத்தில் இயந்திரக்கோளாறு ஏற்ப்பட்டமையால் வவுனியா ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் பழுதடைந்து நின்றது.

நீண்ட நேரமாகியும் புகையிரதக் கோளாறு சீர்செய்யப்படாமையினால் அதில் பயணித்த பொதுமக்கள் பேருந்துகளில் ஏறி தமது பயணத்தினை தொடர்ந்திருந்தனர்.(Vavuniyan) 

No comments